கோவில் வளாகத்தில் அஷ்ட திக் தேவதைகள்
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் வளாகத்தில், அஷ்டதிக் தேவதைகளாக, கிழக்கு - சசி தேவி, தென்க கிழக்கு, ஸ்வாகா தேவி, தெற்கு - ஸ்வர்க்கா தேவி, தென்மேற்கு - வர்காதேவி, மேற்கு - காலகண்டி, வட மேற்கு - நிர்மினி தேவி, வடக்கு - நாரிணி தேவி, வட கிழக்கு - சுசி கேதினி ஆகியோர் காவல் தெய்வங்களாக உள்ளனர்.மேலும், இக்கோவிலில், கிழக்கு நோக்கி, தென் மேற்கு மூலையில், சக்தி விநாயகர் தனி சன்னதியில் எழுந்தருளி வருகிறார்.இக்கோவிலில், முருகப்பெருமான், தனி சன்னதியில், செல்வ முத்துக்குமரனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.