உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீவிரவாதிகளைக் கொன்ற பராக்கிரமம்

தீவிரவாதிகளைக் கொன்ற பராக்கிரமம்

கடந்த 2001ல் ஜம்மு காஷ்மீர் பகுதியில், '9 ஆர்ஆர்'-ல் (ஆர்ஆர் - ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்) பணிபுரிந்தேன். அப்போது, முகுந்த் வரதராஜன், '44 ஆர்ஆர்'-ல் பணிபுரிந்துவந்தார்.நான் பணிபுரிந்த பகுதியில், ஒன்றரை அடி உயரத்துக்குப் பனி படர்ந்திருக்கும். தீவிரவாதிகள் உள்ள இடம் குறித்த தகவல் அறிந்து, ஒருமுறை படையினருடன் சென்றோம். அங்குள்ள வீடுகள் சங்கிலித்தொடர் போல் இருக்கும். சக வீரர் அனந்த்சிங் என்பவர், திடீரென வீட்டுக்குள் சென்றுவிடுகிறார். அவரைத் தீவிரவாதிகள் ஆறு பேர் சுற்றிவளைத்தனர். அனந்த்சிங் தீவிரவாதிகளின் துப்பாக்கிமுனைகளைக் கையில் பிடித்தவாறு மல்லுக்கட்டினார்.துப்பாக்கியால் அவரது உடலைத் தீவிரவாதிகள் சல்லடை போல் தோட்டாக்களால் துளைத்தெடுத்தனர். நானும் என்னுடன் வந்த படையினரும் தீவிரவாதிகள் ஆறு பேரையும் வளைத்து ஆவேசம்பொங்க சுட்டுக்கொன்றோம். ரத்த வெள்ளத்தில் துப்பாக்கிகளைப் பிடித்தபடி கிடந்த அனந்த்சிங், இன்னும் என் கண்ணுக்குள் நிற்கிறார். இதை என்னால் வாழ்நாள் முழுக்க மறக்க இயலாது.உடுமலை, என் சொந்த ஊர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தற்போது பணிபுரிகிறேன். தேசத்திற்காக பணிபுரிந்த நினைவுகள், என்னுள் பசுமையாக இருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி