மேலும் செய்திகள்
பிரதோஷ வழிபாடு; பக்தர்கள் பரவசம்
21-Aug-2025
திருப்பூர் மாணிக்கவாசகர் மன்றம் சார்பில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், திருவாசக முற்றோதல் நடந்தது. ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும், சிவாலயங்களில், திருவாசகம் முற்றோதல் நடத்தி வருகிறது, மாணிக்க வாசகர் மன்றம். அதன்படி, நேற்று, சுக்ரீஸ்வரர் கோவிலில் முற்றோதல் நடந்தது. காலை, 8:00 மணிக்கு, சிறப்பு வழிபாட்டுடன் துவங்கி, அனைத்து பதிகங்களையும் பாராயணம் செய்து, வழிபட்டனர். சிவனடியார்கள், ஒவ்வொரு பதிக நிறைவிலும், சங்கொலி எழுப்பியும், தீபாராதனை செய்தும் வழிபட்டனர்.
21-Aug-2025