திருப்பூர் ; வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த முதல் நாள் முகாமில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், பெயர் சேர்ப்பதற்காக, 3,787 பேர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, 18 வயதானவர்கள் வாக்காளராவதை முதல் பணியாகக் கொள்ள வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,536 ஓட்டுச்சாவடி மையங்களிலும், முதல்கட்டமாக, நேற்றுமுன்தினமும், நேற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது.முதல்நாளான நேற்றுமுன்தினம் நடைபெற்ற சிறப்பு முகாமில், நேரடியாக 3565 பேர்; ஆன்லைனில், 3657 பேர் என மொத்தம் 7,222 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், நேரடியாக 2,151 பேர்; ஆன்லைனில், 1,636 பேர் என மொத்தம் 3,787 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.நேரடியாக 212 பேர்; ஆன்லைனில் 740 பேர் என, மொத்தம் 952 பேர் பெயர் நீக்கத்துக்காகவும்; நேரடியாக 1,202 பேர்; ஆன்லைனில் 1,281 பேர் என, மொத்தம் 2,483 பேர் ஆன்லைனிலும், முகவரி, புகைப்படம், மொபைல்போன் எண் உள்பட திருத்தங்களுக்காக விண்ணப்பித்துள்ளனர். இரண்டாவது நாளாக நேற்றும் முகாம் நடந்தது.இதுவும் முக்கியம்
செம்மையான வாக்காளர் பட்டியல் தயாராவதற்கு, வாக்காளரின் பங்களிப்பும் மிகவும் அவசியமாகிறது. பெயர் சேர்த்தல், திருத்தத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல், இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்யவும் முன்வரவேண்டும். தங்கள் குடும்பத்தில் இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்காக, படிவம் - 7 பூர்த்தி செய்து வழங்க தவறக்கூடாது.