உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வஞ்சியரை வசீகரிக்கும் வஸ்த்ரா

வஞ்சியரை வசீகரிக்கும் வஸ்த்ரா

தீ பங்களின் திருநாளான தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், திருப்பூரில் புதிய ஆடைகளின் விற்பனை களை கட்டி வருகிறது. அவ்வகையில், பாரம்பரியமும் நவீனமும் ஒருங்கிணைந்த சேலைகளை தேர்வு செய்யும் பெண்களுக்கு, திருப்பூரில், தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள 'வஸ்த்ரா' நிறுவனம் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. அதன் நிர்வாகி கல்பனா தங்கராஜ் கூறியதாவது: நடப்பாண்டு தீபாவளிக்காக பல பிரத்யேக ரகங்களைக் கொண்டு வந்துள்ளது. இங்குள்ள சேலைகளின் பிரம்மாண்டம், வாடிக்கையாளர்களுக்கு பலவகையான தேர்வுகளை வழங்கி வருகிறது. எங்களிடம் அரச கம்பீரத்தை வெளிப்படுத்தும் உண்மையான கைத்தறி காஞ்சிபுரம் பட்டு சேலைகள், நேர்த்தியான டஸ்ஸர் சேலைகள், அழகிய டிசைன் மற்றும் வண்ணங்களில் ஆர்கன்சா புடவைகள், அனைத்து தரப்பினரையும் கவரும் டிசைனர் மற்றும் பேன்சி சேலைகள், காட்டன் சேலைகள் உள்ளன. இதுமட்டுமின்றி, 'வண்ண ஓவியா', 'மலர் மணம்', 'நீலப்பட்டு', 'சிவப்புப் பட்டு', 'பச்சை பட்டு' மற்றும் 'பேஸ்டல் பட்டு' போன்ற தனித்துவம் கொண்ட, வண்ணத் தேர்வுகள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பான ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்யும். தீபாவளி சிறப்பு வரவு தீபாவளியை முன்னிட்டு, வஸ்த்ராவில் புத்தம் புதிய கலெக்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணைக் கவரும் டிஜிட்டல் பிரின்ட்களுடன் கூடிய துாய கைத்தறி காஞ்சிபுரம் பட்டு சேலைகள், தீபாவளி சிறப்பு வெளியீடு. பண்டிகை கொண்டாட்டங்களில் உங்களை தனித்துவமாகவும், அழகாகவும் காட்டிக்கொள்ள இந்த சேலைகள் சிறப்பான தேர்வாக அமையும். உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசளிக்கவும் வஸ்த்ராவின் புதிய கலெக்ஷன்கள் இந்த தீபாவளியை மேலும் பிரகாசமாக்கும்.இந்த தீபாவளியை வஸ்த்ராவின் நேர்த்தியான சேலைகளுடன் கொண்டாடுங்கள். அற்புதமான தீபாவளி கலெக்ஷன்களை காணவும், பண்டிகை கால சலுகைகளை பெறவும் அழைக்கிறோம். விவரங்களுக்கு, 95858- 97999 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை