விரிகிறது பசுமைப்பரப்பு சிறக்கிறது சுற்றுச்சூழல்
'வெற்றி' அறக்கட்டளை சார்பில், பல்வேறு பசுமை அமைப்புகளுடன் கரம் கோர்த்து, திருப்பூர் மாவட்டத்தில், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மரம் வளர்ப்பு திட்டம், நேர்த்தியான திட்டமிடலுடன் செயல்படுத்தப்படுகிறது. கடந்த, 2015ல் துவங்கி, 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மரமாக வளர்க்கப்பட்டுள்ளன; 300க்கும் அதிகமான குறுங்காடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.சங்க இலக்கியத்தில் உள்ள மரக்கன்றுகளுடன், சங்க இலக்கிய பூங்கா, கடம்ப வனம், மாநகராட்சியுடன் இணைந்து மூங்கில் பூங்கா போன்றவை பசுமைப்பணிக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளன. அத்துடன், ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில் மரக்கன்று நடும் பணியும் நடந்து வருகிறது. '---2 படங்கள்'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் மூலம் உருவான பசுமைப்பரப்புகள்.தெக்கலுார்பூமலுார்.
களத்தில் செயல்
-------------'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம் கூறுகையில், ''வனத்துக்குள் திருப்பூர் -11 ' திட்டம், வரும் 21ம் தேதி துவங்கப்பட உள்ளது; இந்தாண்டில், மூன்று லட்சம் மரக்கன்று நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பசுமை ஆர்வலர்கள், இளம் அமைப்பினர், வனத்துறை அதிகாரிகள், வனப்பெருக்கு நிறுவன அதிகாரிகளின் கூட்டு முயற்சியால், இத்தகைய பசுமை சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரும், தங்களுக்கான பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வருகின்றனர். 'களத்தில் செயல்' என்ற குறிக்கோளுடன், எங்களது பசுமை பயணம் தொடர்கிறது,'' என்றார். ---சிவராம் படம் வைக்கவும்.