உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி ேஹம்ஸ் ேஷாரூம் திறப்பு விழா கோலாகலம்

தி ேஹம்ஸ் ேஷாரூம் திறப்பு விழா கோலாகலம்

திருப்பூர்; திருப்பூர் ராயபுரத்தில், 'தி ேஹம்ஸ்' ேஷாரூம் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர், ராயபுரம், ஜியோ டவர்ஸ் வளாகத்தில், 'தி ேஹம்ஸ்' என்ற பெயரில் வெளிநாட்டு பொருட்கள், சிறுவர் விளையாட்டு பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், பரிசு பொருட்கள், ஸ்டேசனரிஸ் விற்பனை ேஷாரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக அதன் நிர்வாகிகள் ஜியோ செல்வராஜ், புவனேஸ்வரி, சுரேஷ், மகாலட்சுமி, ஹரி வசந்த், அஜிதா ஹரி ஆகியோர் வரவேற்றனர். பா.ஜ., தேசிய குழு உறுப்பினர் சேலஞ்சர் துரை ரிப்பன் வெட்டி புதிய ேஷாரூமைத் திறந்து வைத்தார். திறப்பு விழாவில், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், டெக்மா முன்னாள் தலைவர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் நடிகர் புகழ் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கேற்றினர். தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் சுப்ரமணியம் முதல் விற் பனையைத் துவக்கி வைத் தார். விகாஸ் வித்யாலயா தலைவர் ஆண்டவர் ராமசாமி முதல் விற்பனையைப் பெற்றுக் கொண்டார். திறப்பு விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், ஆனந்தன், விஜயகுமார், அரசியல் பிரமுகர்கள், தொழிற்துறையினர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை