உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம சபாவில் எதிரொலித்த தெரு நாய் தொல்லை பிரச்னை

கிராம சபாவில் எதிரொலித்த தெரு நாய் தொல்லை பிரச்னை

பொங்கலுார்: பொங்கலுார் வட்டார ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் பரபரப்பு இன்றி முடிந்தது.கிராம சபாவில் குறைந்த அளவு பொதுமக்களே கலந்து கொண்டனர். அரசு கொடுத்த பழுதடைந்த வீடு பராமரிப்பு திட்டம், முதல்வர் மறு கட்டுமானத் திட்டம், கலைஞர் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வாவிபாளையம் ஊராட்சியில் டயாபர் தொழிற்சாலைக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காங்கயம், வெள்ள கோவில், ஊத்துக்குளி, சென்னிமலை ஒன்றிய பகுதிகளில் நாய் கடித்த ஆடுகளுக்கு சந்தை மதிப்பில் ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் இழப்பீடு வழங்க வேண்டும், தெரு நாய்களை ஊராட்சி நிர்வாகிகள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுக்களை விவசாயிகள் அளித்தனர். அவை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ