உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துார் வாரப்படும் ஜம்மனை ஓடை

துார் வாரப்படும் ஜம்மனை ஓடை

திருப்பூர் : மழை காரணமாக அதிகளவில் நீர் வரும் ஓடைகள் துார் வாரும் பணி மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.திருப்பூரின் மையப்பகுதியில் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. கோவையில் பூண்டி மலையடிவாரத்தில் துவங்கும் இந்த ஆறு, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைக் கடந்து காவிரியில் சென்று கலக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில் சாமளாபுரம் பகுதியில் நுழையும் இந்த ஆறு, மங்கலம் வழியாக திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் நுழைந்து ஏறத்தாழ 10 கி.மீ., பயணிக்கிறது. இடைப்பட்ட பகுதியில் சேனாப்பள்ளம், ஜம்மனை ஓடை, சங்கிலிப் பள்ளம், சபரி ஓடை, மந்திரி வாய்க்கால் ஆகிய நீரோடைகள் நொய்யலில் சென்று சேருகிறது. இது தவிர, பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கழிவு நீர் மற்றும் மழை நீர் வடிகால்களும் நொய்யலில் கலக்கிறது.தற்போது மழைக்காலமாக உள்ள நிலையில், இந்த நீரோடைகளில் அதிகளவில் நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஓடை மற்றும் பள்ளங்கள் பெருமளவு மண் மேடு மற்றும் ெசடி கொடிகள் பரவி, புதர்கள் போல் மண்டிக்கிடந்தன. இதனால், மழை நீர் வருவது தடைப்படும்; அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் ேராட்டில் சென்று பாயும் அபாயம் காணப்பட்டது.இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நொய்யலில் சென்று சேரும் ஓடைகள் துார் வாரி, சீரமைக்கும் பணி மேற்கொள் ளப்பட்டுள்ளது. இதன் கார ணமாக இவற்றில் மழை நீர் தடையின்றி பாயும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ