ஜம்மனை ஓடையில் இளம்சிவப்பு நிற நீர்
திருப்பூர்; திருப்பூரில் நேற்று பரவலாக மழை பெய்தது. தென்னம்பாளையம் அருகே, ஜம்மனை ஓடையில், இளம் சிவப்பு நிறத்தில் நுரை பொங்க நீர் பாய்ந்தோடியது. மாசுக்கட்டுப்பாடு வாரிய பறக்கும்படை பொறியாளர் லாவண்யா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மூன்று இடங்களில் நீர் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டதில், டி.டி.எஸ்., 2700 ஆகவே உள்ளது. சாயம் கலந்துள்ளதா; வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்துவதற்காக, நீர் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது; ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்து, பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்பகுதியில் தக்காளிகள் அதிகளவில் கொட்டப்பட்டிருந்தன. இவை அடித்துச்செல்லப்பட்டதால் நீர், செந்நீராக மாறியிருக்கலாம் என்று கருதுகிறோம்.