உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

திருப்பூர்; சிக்கண்ணா அரசு கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவர்கள், பசுமையான தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரியில் கடந்த 1998 - 2001ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு நேற்று காலை நடந்தது. கல்லுாரியில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அனைத்து துறைகளை சேர்ந்த முன்னாள் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மறைந்த பேராசிரியர், முன்னாள் மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பேராசியர்கள் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் மாணவர்களான தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஈசன் முருகசாமி, மாநகராட்சி துணை கமிஷனர் மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் சார்பில், கல்லுாரிக்கு, ஐந்து பீரோக்கள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்கள் சங்கம் உருவாக்கப்பட்டு, கல்லுாரிக்கு தேவையான அடிப்படை வசதிகள், பொருளாதார ரீதியாக கல்வி, வேலைக்கு சிரமப்படுபவர்களுக்கு உதவ திட்டமிடப்பட்டது. மதியம் உணவு ஏற்பாடும், மாலை கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கல்லுாரி பருவ நினைவுகளையும், வகுப்பறைகளை பார்வையிட்டு பகிர்ந்து மகிழ்ந்தனர். --- மேடை படத்தில் நீதிபதியை மட்டும் கட் செய்யவும்... --- முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி ஜீவா பாண்டியன்; இதில் பங்கேற்றோர். நல்ல வேட்பாளர் தேர்வு கற்றுக்கொடுத்த கல்லுாரி பள்ளி படிப்பை முடித்து விட்டு, ஒரு பயத்துடன் கல்லுாரிக்கு வந்தோம். இந்த கல்லுாரி தான், தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஓட்டுரிமை அனுமதி கொடுப்பதற்கு முன்பு, எங்களை வாக்காளராக, நல்ல வேட்பாளரை எப்படி தேர்வு செய்வது என்பதை கற்று கொடுத்தது. அன்றைய காலகட்டத்தில் ஆறு துறைகள் தான் இருந்தன. தற்போது பல்வேறு துறைகள் உருவாகி, ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கல்லுாரிக்கு தேவையான பல அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்னாள் மாணவர்கள் முன் வந்துள்ளனர். - முன்னாள் மாணவரும், நீதிபதியுமான ஜீவா பாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி