உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னைகளை காப்பாற்ற வரமாய் வந்தது மாமழை

தென்னைகளை காப்பாற்ற வரமாய் வந்தது மாமழை

பொங்கலுார்:ஆடி, ஆவணி மாதங்களில் பெய்யும் மழை பொய்த்துப் போனது. நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்தது. விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள தென்னை மரங்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் கருகத் துவங்கியது. தென்னை மரங்களை காப்பாற்ற பல விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர். புதிய ஆழ்குழாய் கிணறு அமைப்பதிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். விவசாயிகளின் பொருளாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் பலரும் மழை பெய்யாதா என்று ஏக்கப் பெருமூச்சு விட்டனர். தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி விதைப்பு பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர். மழையால் பூச்சி தாக்குதல் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தென்னை விவசாயிகளுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை