உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் சக் ஷம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் சக் ஷம்

திருப்பூர், : திருப்பூர் மாவட்ட 'சக் ஷம்' அமைப்பு சார்பில், நேற்று ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்ச்செல்வன், பழனிசாமி - பொன்னம்மாள் அறக்கட்டளை நிறுவனர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாற்றுத்திறனாளிகள் 14 பேருக்கு, 94 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டன.இலவச செயற்கை அவயங்கள் வழங்குவதற்கான அளவீடு முகாம், மங்கலம் ரோடு, செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நடந்தது. 29 பேருக்கு, கால் அளவீடு செய்யப்பட்டது. தம்பி நண்பர்கள் நற்பணி மன்றத்துடன் இணைந்து, இலவச கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடந்தது. தி ஐ பவுண்டேஷன் குழுவினர், 29 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். 10 பேர், இலவச கண் புரை அறுவை சிகிச்சைகளுக்கும், 7 பேர் உயர் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டனர். துளசி பார்மஸி சார்பில், 34 பேருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !