வரி விலக்கு தந்த இன்ப அதிர்ச்சி
மத்திய பட்ஜெட் குறித்து திருப்பூர் பகுதி பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள்:சின்னசாமி, விசைத்தறி உரிமையாளர்:சுற்றுலா துறைக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா துறை வாயிலான வருவாய் பெருகும். சுற்றுலா தலங்கள் மேம்படுத்துதல், சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையிலான செயல்பாடுகள் அதிகரிக்கும். இது வரை இல்லாத வகையில் பாதுகாப்பு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், இதன் வளர்ச்சியை, 45 சதவீதம் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, விசைத்தறி தொழில் மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.