உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எலுமிச்சை விலை உயர்ந்தது; சந்தைக்கு வரத்து குறைந்தது

எலுமிச்சை விலை உயர்ந்தது; சந்தைக்கு வரத்து குறைந்தது

திருப்பூர் : திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பின், வடக்கு உழவர் சந்தைக்கு வழக்கமாக, 80 முதல், 100 கிலோ எலுமிச்சை விற்பனைக்கு வரும். கடந்த ஒரு வாரமாக, 20 முதல், 30 கிலோ மட்டுமே வருகிறது. இதனால், கிலோவுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 200 - 220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை விலையில், ஒரு பழம் எட்டு ரூபாய்.தென்னம்பாளையம் மார்க்கெட்டில், முதல் ரகம், 220 ரூபாயாக உள்ளது. எலுமிச்சை விலை திடீரென உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், சீசன் இல்லாத நாளில் விலை உயர்ந்தும், விற்பனை மந்தமாக உள்ளதால், அதிக விற்பனை இருக்காது என வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

வெயில் காரணம்?

வழக்கமாக செப்., மாதத்தில் அதிகளவில் வெயில் பதிவுஆகாது; காற்றின் வேகம் தான் அதிகமாக இருக்கும். ஆனால், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.வெயில் வாட்டி எடுப்பதால், ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்பனை அதிகமாகியுள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளது என்கின்றனர், வியாபாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ