உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேறாமல் போனதே காரணம்!

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேறாமல் போனதே காரணம்!

பொங்கலுார் : கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாகவும், வாழ்வாதாரமாகவும் இருப்பது பி.ஏ.பி., பாசனம். அதன் பாசனப் பகுதிகளில் பிரதான பயிரே தென்னை விவசாயம் தான்.தேங்காய் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உற்பத்தியாகிறது. உற்பத்தி திறனில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு பி.ஏ.பி., பாசனப்பகுதியே முக்கிய காரணம். இப்பகுதி தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்குசாகுபடி பரப்பை கொண்டுள்ளது.பி.ஏ.பி., பாசனப் பகுதிகளில் கடந்தாண்டு போதிய மழை இல்லை. தண்ணீர் பற்றாக்குறையால் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால், தேங்காய் உற்பத்தி குறைந்து, வரலாறு காணாத அளவு விலை உயர்ந்துள்ளது.கடந்தாண்டு கிலோ, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கொப்பரை இந்தாண்டு, 180 ரூபாயாக உயர்ந்துள்ளது. வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டுதான் சில்லறை விலையில் எடை கணக்கில் தேங்காய் விற்பனை செய்யப்படுகிறது. அபரிமிதமான விலை ஏற்றம் பொதுமக்கள் தேங்காய் வாங்குவதற்கு யோசிக்க வைத்து விட்டது என்றே கூறலாம்.பி.ஏ.பி., திட்ட பாசன விவசாயிகள் சிலர் கூறியதாவது:பி.ஏ.பி., திட்டத்தில், 12 அணைகள் கட்ட ஒப்பந்தம் உள்ளது. கேரள மாநிலம், இடைமலையாறு அணையை கட்டி முடித்து விட்டது. ஆனால், தமிழகம் இன்னும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்தாமல் உள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியால் தண்ணீர் இன்றி தென்னை மரங்கள் குற்றுயிரும், குலையுயிருமாக மாறிவிட்டது.இதனால், தென்னை மரம் காய்ப்பு திறனை இழந்து விட்டது. ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. தேங்காய் விளைச்சலும் குறைந்து இருக்காது. விலையும் கட்டுக்குள் இருந்திருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ