உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வலுவிழக்கும் ஒட்டுக்குளத்தின் கரை

வலுவிழக்கும் ஒட்டுக்குளத்தின் கரை

உடுமலை; ஒட்டுக்குளத்தின் கரையை வலுப்படுத்தி, மண்பாதையையும் சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட ஒட்டுக்குளம், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நகரின் அருகில், 90 ஏக்கர் நீர் பரப்பில், இக்குளம் அமைந்துள்ளது.குளத்து கரையிலுள்ள மண்பாதையை அப்பகுதி விவசாயிகளும், சுண்டாக்கம்பாளையம் உட்பட கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த பாதையை சீரமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கரையும் ஆங்காங்கே சரிந்து வருகிறது. எனவே, பொதுப்பணித்துறையினர், ஒட்டுக்குளத்தின் கரைகளை சீரமைத்து, மண் பாதையையும் மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ