ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் ஸ்மார்ட் கண்காட்சி அசத்தல்
திருப்பூர்: திருப்பூர், அம்மாபாளையத்தில் அமைந்துள்ள 'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளியில், 'ஸ்மார்ட் மழலையர் கண்காட்சி' நடந்தது.பிற பள்ளிகளில் இருந்தும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கண்காட்சியை, பெற்றோர் கண்டு வியந்தனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வர்ணம் தீட்டுதல், உடை அலங்காரம், ரைம்ஸ் ஒப்புவித்தல், கதை பாடல், கட்டை விரலால் ஓவியம் தீட்டுதல், ஒரு நிமிட பேச்சு, தனி நபர் நடனம், காய், கனிகளை கொண்டு ஓவியம், பாடல், பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.மேலும், பெற்றோர்க்கு கொலு அலங்காரம், கோலப்போட்டி, நெருப்பில்லா சமையல், குறிப்பை கொண்டு பாடல் கண்டுபிடித்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன.வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் ராஜேந்திர பிரசாத், நிர்வாக இயக்குனர் ஜனபாரதி, செயலாளர் தினகரன், பள்ளி துணை முதல்வர் பிரேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.---ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் நடந்த கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், பள்ளி நிர்வாகத்தினர்.