உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  புதர் மண்டி காணப்படும் ஓடை; துார்வார வலியுறுத்தல்

 புதர் மண்டி காணப்படும் ஓடை; துார்வார வலியுறுத்தல்

உடுமலை: உடுமலை திருப்பூர் ரோடு ஓடை, புதர் மண்டி காணப்படுவதால், கழிவு நீர் செல்ல வழியின்றி சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது. உடுமலை பகுதிகளில் பெய்யும் மழை நீர் இயற்கையாக வெளியேறும் வகையில், தங்கம்மாள் ஒடை, பழநி ரோடு, திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடுகளில் ஓடைகள் அமைந்துள்ளது. தற்போது, கழிவு நீர் வெளியேற்றும் ஓடைகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில், செடி, கொடிகள் முளைத்தும், மண் மூடியும் புதர் மண்டிக்காணப்படுகின்றன. திருப்பூர் ரோட்டில் அமைந்துள்ள ஓடை, வழித்தடத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில், மழை பெய்தால், வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. தற்போது, புதர் மண்டிக்காணப்படுவதால், கழிவு நீர் வெளியேற வழியின்றி, துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதார கேடு ஏற்படுத்தி வருகிறது. எனவே, ஓடையை துார்வார நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ