உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சோலை வனமாக மாறிய கிராம கோவில் வளாகம்

சோலை வனமாக மாறிய கிராம கோவில் வளாகம்

பொங்கலுார்:பொங்கலுார் ஒன்றியம், கோவில்பாளையத்தில் அண்ணமார் சுவாமி கோவில் உள்ளது. கோவிலை சுற்றி உள்ள நிலங்கள் தரிசாக கிடந்தது. அதில், மரம் நட்டுவளர்த்து சோலை வனமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் முடிவு எடுத்தனர். அதற்காக, சொட்டுநீர் பாசனம் அமைத்து, 50க்கும் மேற்பட்ட புளிய மர கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். தற்போது புளிய மரங்கள் நன்றாக வளர்ந்து சோலைக்காடாக மாறி உள்ளது. புளிய மரம் காய்ப்புக்கு வந்துள்ளதால் விரைவில், அறுவடை துவங்கும். அதிலிருந்தும் குறிப்பிட்ட அளவு வருமானம் கிடைக்கும். அதனை கோவில் செலவுகளுக்கு பயன்படுத்த முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை