உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது

திருப்பூர்: திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது. 800 உதவி தேர்வர் உட்பட 1,200 பேர் பணிகளை துவக்கினர். முன்னதாக விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் அலுவலர்களிடம், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து பேசுகையில், ''விடைத்தாள் திருத்தும் பணிக்கு குறித்த நேரத்தில் முகாமுக்கு வர வேண்டும். பணியின் போது மொபைல் போன் கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. மீறினால், துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சரியான விடைகளுக்கு தான் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதா என்பதை முதன்மை தேர்வர் இருமுறை சரிபார்க்க வேண்டும்'' என்றார்.தாராபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள, தேன்மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடைத்தாள் திருத்தும் மையத்தில், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கல்வி) பழநி, தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். நேற்று துவங்கிய விடைத்தாள் திருத்தும் பணி, வரும், 30ம் தேதி வரை நடக்கிறது. மே, 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை