மேலும் செய்திகள்
கோயில்களில் பங்குனி திருவிழா
09-Apr-2025
தாராபுரம்; தாராபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.தாராபுரம் நகராட்சி, 12வது வார்டில் மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதனையொட்டி, நாயுடு சமூகத்தினர் சார்பில் அமராவதி ஆற்றிலிருந்து புனித தீர்த்தம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.பல்வேறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் மாரியம்மன் கோவிலை அடைந்தது. அதன்பின், கோவிலில் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் நடத்தி, தீர்த்த அபிேஷகமும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன.விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
09-Apr-2025