உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளை நிலத்தில் நஞ்சு அதிகம்; வேளாண் மாணவியர் விளக்கம்

விளை நிலத்தில் நஞ்சு அதிகம்; வேளாண் மாணவியர் விளக்கம்

திருப்பூர்; திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் கிராமத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவிகள், மண்புழு உரம் தயாரிப்பு குறித்த செயல் விளக்கம் அளித்தனர்.விவசாயிகள் மத்தியில், ஏழு பேர் அடங்கிய வேளாண் மாணவிகள் கூறுகையில், 'தற்போதைய காலகட்டத்தில், ரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளின் அதிக பயன்பாடு காரணமாக, வேளாண் நிலத்தில் நஞ்சு அதிகரித்துள்ளது.மேலும், மண் வளம் மற்றும் செயல்திறன் பாதித்துள்ளது. மண்வளத்தை மீட்டெடுக்கவும், மண், அதில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்பாட்டை அதிகரிக்கவும், ரசாயன செயல்பாட்டை குறைத்து, அங்கக முறையில் விவசாயம் செய்ய வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை