உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சமையல் காஸ் சிலிண்டர் காப்பீடு விழிப்புணர்வு இல்லை

சமையல் காஸ் சிலிண்டர் காப்பீடு விழிப்புணர்வு இல்லை

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் குறைகேட்பு கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில், பங்கேற்ற திருமுருகன்பூண்டி ரோட்டரி பட்டய தலைவர் முருகானந்தம் கூறியதாவது:எண்ணெய் நிறுவனங்கள் சமையல் காஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தும் போதோ, குறைக்கும் போதோ, உடனடியாக அமல்படுத்தி விடுகின்றன; வாடிக்கையாளர்களுக்கு விலையேற்றம் குறித்து வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ்., வாயிலாக, முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகளிடம் முன்வைத்தோம்.சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து, உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்படும் போது, 40 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும். விபத்து நடந்ததற்கான ஆதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யும் பட்சத்தில், இழப்பீடு கிடைக்கும் என்ற விழிப்புணர்வு வாடிக்கையாளர்களிடம் இல்லை. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.சமையல் காஸ் சிலிண்டர் நிறுவனங்கள் வாயிலாக விற்கப்படும் 'எனர்ஜி எபிசியன்ட் ஸ்டவ்' எனப்படும் அடுப்பு பயன்படுத்துவதன் வாயிலாக, 75 சதவீதம் சமையல் காஸ் சேமிக்க முடியும் என்கின்றனர் அதிகாரிகள். ஆனால், இதுகுறித்த விழிப்புணர்வு வாடிக்கையாளர்களுக்கு இல்லை. எனவே, சமையல் காஸ் சிலிண்டர் பயன்பாடு, வழங்கப்படும் சேவைகள் குறித்து முழு அளவிலான விழிப்புணர்வை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ