உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இத கூடவா திருடுவாங்க!

இத கூடவா திருடுவாங்க!

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில், ரோட்டில் சேகரமாகும் மழை நீர் ஆங்காங்கே சேகரிப்பு குழாய் அமைத்து, வடிகாலில் சென்று சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேகரிப்பு குழாய்கள் மீது இரும்பு மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன.அவ்வகையில், குமார் நகர், 60 அடி ரோடு ஸ்மார்ட் ரோட்டில், இதுபோன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில விஷமிகள் இந்த இரும்பு மூடிகளை திருடிச் சென்றுள்ளனர். இதேபோல், நடைபாதையில் அமைக்கப்பட்ட ஸ்டீல் குழாய்களையும் திருடிய சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. தற்போது இது போன்ற செயல்களால் மூடிகள் இல்லாத குழிகளில் பாதசாரிகள், வாகனங்கள் சிக்கும் அபாயம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை