உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெள்ளித்திரையில் திருக்குறள்

வெள்ளித்திரையில் திருக்குறள்

காமராஜரின் வாழ்க்கையை 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து, இயக்கியவர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். அவர் வள்ளுவரையும் திரைப்படமாக இயக்கியிருக்கிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிப்பில், 'திருக்குறள்' என பெயரிடப்பட்ட அந்த படம், ஓரிரு தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது; அவிநாசி, கருணம்பிகை தியேட்டரில் சிறப்பு காட்சியாக 'ரிலீஸ்' செய்யப்பட்டது.வள்ளுவராக நடித்த கலைச்சோழன், வள்ளுவரை கண்முன் கொண்டு வர ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்; சில இடங்களில் மென்மை, சில இடங்களில் கோபம் என மாறுபட்ட நடிப்பை காண முடிந்தது. அவரது மனைவியாக நடித்த தனலட்சுமி, இயல்பான நடிப்பில் வாசுகியாகவே வாழ்ந்திருக்கிறார். சுப்பிரமணிய சிவா, ஓ.ஏ.கே.சுந்தர், சுகன்யா, சந்துரு, கொட்டாச்சி, கார்த்தி, ஹரிதாஸ்ரீ என பழைய, புதுமுக நடிகர் பட்டாளமும் இணைந்திருக்கின்றனர்.தமிழர்களின் காதல், கற்பு மற்றும் வாழ்க்கை எந்தளவு அறத்துடன் விளங்கியது என்பதையே கதை வலியுறுத்துகிறது. கள் உண்ணாமை, உயிர்களை கொல்லாமை என்பது போன்ற வள்ளுவனின் கருத்துகள் ஆணித்தரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் மேலாக, இளையராஜாவின் இசை, திரைக்கதைக்கு வலு சேர்க்கிறது.இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய காலத்தை கண்முன் நிறுத் தும் வகையில் தயாரிக்கப்பட்ட படத்தில், பிரம்மாண்டம் கொஞ்சம் குறைவு என்றாலும், ரசிகர்களிடம் ஒரு திருப்தி. சிறப்பு காட்சியை பார்வையிட, தமிழ் ஆர்வலர்கள் பலரும் ஆர்வம் காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை