திருக்குறள் முற்றோதல் போட்டி; அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
உடுமலை : திருப்பூர் மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடந்த திருக்குறள் முற்றோதல் போட்டியில் பல பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அர்ஷின்சனா பங்கேற்று அனைத்து குறட்பாக்களையும் முற்றோதல் செய்தார்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் பரிசு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, கலெக்டர் கிறிஸ்துராஜ், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள் மாணவிக்கு ரொக்கப்பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், பாராட்டு சான்றிழும் வழங்கினர்.பரிசு பெற்ற மாணவிக்கு, திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை துணை ஆய்வாளர் கலைமணி, பள்ளி தலைமையாசிரியர் விஜயா, உதவி தலைமையாசிரியர் ஜெயராஜ் மற்றும் ஆசிரியர்கள், பள்ளிக் கல்வி மேலாண்மை உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.