திருமூர்த்திமலை கோவில் உண்டியல் எண்ணிக்கை
உடுமலை; உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கை எண்ணப்பட்டது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், 12 உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த, நவ.,18ம் தேதி, இறுதியாக உண்டியல்கள் எண்ணப்பட்டன.இந்நிலையில், கடந்த வாரம் பெய்த கன மழையால், கோவில் வளாகத்தை வெள்ள நீர் சூழ்ந்தது. கோவில் உண்டியல்கள் பாதுகாப்பாக இருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு பின், நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், 79 ஆயிரத்து, 388 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.மழையால் நனைந்திருந்த பணம் காயவைக்கப்பட்டு, வங்கியில் செலுத்தப்பட்டது.