உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமுருகன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி சாதனை

திருமுருகன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி சாதனை

அனுப்பர்பாளையம், ; திருப்பூர் அருகே நெருப்பெரிச்சலில் அமைந்துள்ள திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் - 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளி மாணவி ரியாஷிகா, 580 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், மாணவன் வினோத், 577 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவன் விஜித், 576 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் ஆறு பேர், பொருளாதாரம் பாடத்தில் இருவர், கணிதம் மற்றும் வேதியியல் பாடத்தில் தலா ஒருவர், கணக்குப்பதிவியலில் ஆறு பேர், இயற்பியல் பாடத்தில் ஒருவர், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடத்தில் ஆறு பேர், என 23 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.மொத்தம், 143 மாணவர்களில் 580 மதிப்பெண்ணுக்கு மேல் ஒருவரும், 570 மதிப்பெண்ணுக்கு மேல் 10 பேரும், 560 மதிப்பெண்ணுக்கு மேல் 14 பேரும், 550 மதிப்பெண்ணுக்கு மேல் 24 பேரும், 500 மதிப்பெண்ணுக்கு மேல் 46 பேரும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். சாதித்த மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிறுவனர் மோகன், தாளாளர் சுதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ