வரும் 28ல் திருவள்ளுவர் தின கலை இலக்கிய போட்டிகள்
உடுமலை; உடுமலை திருவள்ளுவர் திருக்கோட்டத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடக்கிறது.உடுமலை, தாராபுரம் ரோடு, அய்யலு மீனாட்சி நகரிலுள்ள திருவள்ளுவர் திருக்கோட்டம் சார்பில், திருவள்ளுவர் நாள் கலை இலக்கிய போட்டிகள் வரும், 28ம் தேதி நடக்கிறது.1 முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளும், 1 முதல் 5ம் வகுப்பு வரை, பிடித்த படம், பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும், பன்மக்கட்பேறு, திருக்குறளில் அறிவியல் சிந்தனைகள்ஆகிய தலைப்புகளில், பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடக்கிறது.போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் வாயிலாகவும் அனுப்பலாம்.மேலும் விபரங்களுக்கு, ஆசிரியர்கள், அருள்கணேசன், 86107 51652; விஜயலட்சுமி 94421 10286 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என திருவள்ளுவர் திருக்கோட்டம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.