உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருவனந்தபுரம் - பனராஸ் சிறப்பு ரயில் அறிவிப்பு 

திருவனந்தபுரம் - பனராஸ் சிறப்பு ரயில் அறிவிப்பு 

திருப்பூர்; மகா கும்பமேளாவை முன்னிட்டு திருவனந்த புரத்தில் இருந்து உ.பி., மாநிலம், பனராஸ்க்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.பிப்., 18 மற்றும், 25ம் தேதி (செவ்வாய்) மதியம், 2:00 மணிக்கு திருவனந்தபுரத்தில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06007) வியாழன் இரவு, 9:50 மணிக்கு பனராஸ் சென்று சேரும். இந்த ரயில் புதன்கிழமை அதிகாலை, 2:00 மணிக்கு திருப்பூரை கடக்கும். பிப்., 21 மற்றும், 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை, 6:05 மணிக்கு பனராஸில் புறப்படும் ரயில் (எண்:06008) ஞாயிறு இரவு, 11:55 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும். இந்த ரயில் ஞாயிறு மதியம், 2:43 மணிக்கு திருப்பூரை கடந்து செல்லும், சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ