உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தீவன தட்டுப்பாடு அபாயம்

 தீவன தட்டுப்பாடு அபாயம்

இந்த ஆண்டு மழை பொய்ததால், கோடை காலத்தில் கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த மக்காச்சோளம் தற்போது அறுவடை செய்யப்படுகிறது. மக்காச்சோள அறுவடைக்கு ஆட்களை பயன்படுத்தினால் செலவு அதிகரிக்கும். எனவே, விவசாயிகள் இயந்திரங்களை பயன்படுத்தி அறுவடையை மேற்கொள்வர். இயந்திரங்களைப் பயன்படுத்தும் பொழுது சோளத்தட்டு பெருமளவு சேதமடையும். எனவே, பல விவசாயிகள் ஆட்களை வைத்து மக்காச்சோள அறுவடையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சோளத்தட்டை சேதம் இல்லாமல் பதப்படுத்தி சேமிக்க திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !