உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ நம்பி ஆரூரர் சிவகைங்கர்ய சபா கோசாலையில் முப்பெரும் விழா

ஸ்ரீ நம்பி ஆரூரர் சிவகைங்கர்ய சபா கோசாலையில் முப்பெரும் விழா

அவிநாசி : அவிநாசி, சேவூர் ரோடு, மடத்துப்பாளையம் ரோட்டில் உள்ள கோசாலையில் ஸ்ரீ நம்பி ஆரூரர் சிவகைங்கர்ய சபா சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவில் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதினம், 27வது குரு மகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் வருகை புரிந்து கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு உணவளித்தார்.தொடர்ந்து, பின்னர் கோ சாலையில் உள்ள பசு ஈன்ற கன்று குட்டிக்கு அபிராமி என பெயர் சூட்டி, ஆசீர்வதித்தார். அதன்பின், கோ சாலையில் உள்ள நந்தவனத்தில் வில்வ மரக்கன்று ஒன்றை நட்டினார். முன்னதாக, தருமை ஆதினத்துக்கு ஸ்ரீ நம்பி ஆரூரர் சிவகைங்கர்ய சபா நிறுவனர் ஆரூர சுப்ரமண்ய சிவம் தலைமையில், பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை