உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டவுன் பஸ்களிலும் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட்; இன்று முதல் அமலுக்கு வருகிறது

டவுன் பஸ்களிலும் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட்; இன்று முதல் அமலுக்கு வருகிறது

திருப்பூர் : திருப்பூர் மண்டலத்தில் 'கியூ ஆர் கோடு' மூலம் சர்வீஸ் பஸ்களில் டிக்கெட் வழங்கும் நடைமுறை கடந்த மாதம் அறிமுகப் படுத்தப்பட்டது.பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்ததை தொடர்ந்து, இன்று முதல் டவுன் பஸ்களில் 'கியூஆர்கோடு' மூலம் டிக்கெட் வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது.திருப்பூரில் இயங்கும் அரசு பஸ்களிலும் 'கியூஆர் கோடு' மூலம் டிக்கெட் வழங்கும் நடைமுறை கடந்த, மார்ச், 20 ம் தேதி அமல்படுத்தப்பட்டது.முதல் கட்டமாக, நுாறு புறநகர் பஸ்களில் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் மூலம் பயணிகள் சிரமமின்றி, சில்லறை பிரச்னை இல்லாமல், நடத்துனரிடம் டிக்கெட் பெற்று வந்தனர்.கடந்த பத்து நாட்களில் மேலும், 150 புறநகர் பஸ்களில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.புறநகர் பஸ்களை தொடர்ந்து, திருப்பூர் மண்டலத்தில் இயங்கும் டவுன் பஸ்களிலும் ஜிபே, போன்பே, பாரத் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலம் டிக்கெட் பெறும் வசதி கொண்டு வரப்பட உள்ளது.

பயணிகளிடம் வரவேற்பு

போக்குவரத்து கழக, திருப்பூர் மண்டல மேலாளர் (பொது) சிவக்குமார் கூறியதாவது:'கியூ ஆர் கோடு' மூலம் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் வசதி பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சராசரியாக, 50 ஆயிரம் முதல், 1.20 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டப்படுகிறது. ஆன்லைன் பணம் செலுத்தும் வசதியால், நடத்துனர்களின் சில்லறை பிரச்னைக்கு தற்காலிகமாக தீர்வு கிடைத்துள்ளது.பயணிகள் வரவேற்பையடுத்து, இன்று முதல் திருப்பூர் மண்டலத்தில் இயங்கும் டவுன் பஸ்களிலும் 'கியூஆர் கோடு' மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.பயணிகள் விருப்பத்துக்கு ஏற்ப ஆன்லைன் பணபரிவர்த்தனை மேற்கொள்ள நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பணம் செலுத்தி, நேரடி டிக்கெட் கேட்கும் பயணிகளுக்கு, நேரடி டிக்கெட்டு வழங்கப்படும். டவுன் பஸ்களில் வரவேற்பை பொறுத்து, அனைத்து பஸ்களிலும் ஆன்லைன் பரிவர்த்தனைக்கான வசதி ஏற்படுத்தப்படும்.இவ்வாறு, சிவக்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

pmsamy
ஏப் 14, 2025 09:01

தமிழக அரசின் பேருந்து கழகம் பணத்திற்கு மாற்றாக வேறு வழியில் பயணச்சீட்டு பெற ஏற்பாடு செய்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை