/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிரம்பும் நிலையில் திருமூர்த்தி அணை; மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நிரம்பும் நிலையில் திருமூர்த்தி அணை; மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
உடுமலை : திருமூர்த்தி அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், பாலாற்றின் வழியோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில், நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 56.71 அடி நீர்மட்டம் உள்ளது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான, திருமூர்த்தி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால், அணை விரைவில் நிரம்பும் வாய்ப்புள்ளதோடு, அணை பாதுகாப்பு கருதி, உபரி நீர் பாலாற்றில் திறக்கப்படும் சூழல் உள்ளது.பாலாறு, திருமூர்த்தி அணை துவங்கி, ஆழியாற்றில் கலந்து, கேரளா மாநிலத்திலுள்ள பாரதப்புழா ஆற்றில் இணைகிறது.இதனால், நீர் வளத்துறை சார்பில், பாலாற்றின் வழியோரத்திலுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.