உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்; திருப்பூர் தொழிலதிபர் நியமனம்

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்; திருப்பூர் தொழிலதிபர் நியமனம்

திருப்பூர் ; திருப்பதி தேவஸ்தானத்துக்கான அறங்காவலர் குழுவில் திருப்பூர் தொழிலதிபர் உட்பட, 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கான அறங்காவலர் நிர்வாக குழு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும். அவ்வகையில், புதிய அறங்காவலர் குழு நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், குழு தலைவராக ராஜகோபால் நாயுடு நியமிக்கப்பட்டார். உறுப்பினர்களாக, 24 பேர் நியமிக்கப்பட்டனர். அதில், தமிழகத்தின் சார்பில், திருப்பூர் 'டாலர்' நிறுவனங்களின் தலைவர் ராமமூர்த்தி, சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருப்பதி தேவஸ்தானத்துக்கான அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ள ராமமூர்த்திக்கு, திருப்பூர் பின்னலாடை தொழிற்துறையினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ