வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்புறம் எப்படித்தான் மின்துறை அமைச்சர் குடும்பமும், அப்பா குடும்பமும் பலப் பல லட்சம் கோடிகளைச் சேர்ப்பதாம்?
திருப்பூர்:திருப்பூர், செல்வபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியம். இவரது வீட்டு மின் இணைப்புக்கு சராசரியாக, 200 முதல், 300 யூனிட் வரை மின்சாரம் பயன்பாடு ஏற்படும். நடப்பு மாதம், 5,437 யூனிட்டுகள் பயன்படுத்தியதாக, 61,000 ரூபாய் கட்டணம் செலுத்த, பில் வந்தது. அதிர்ச்சியடைந்தவர், மின் வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது, 'புளூடூத் டிவைசில் மின் கணக்கீடு செய்ததால், ஏதேனும் தவறு நேர்ந்திருக்கலாம்' என கூறினர். சந்தேகமடைந்த அவர் மின் இணைப்பை சோதனை செய்தார். மின் சப்ளையை நிறுத்தி, பியூஸ் கேரியர்களை அகற்றியபின்னரும் கூட, மீட்டர் சுழன்று யூனிட் கணக்கு ஏறியது. ஒரு மணி நேரத்தில், 40 யூனிட் அளவு, மின் சப்ளையே இல்லாமல் மீட்டர் ஓடியது. இது குறித்து, அவர், மின் வாரியத்துக்கு கடிதம் அளித்தார் இதேபோல, அதே பகுதியைச் சேர்ந்த 'சிங்கிள் பேஸ்' மின் இணைப்பில் ஒரு அறை கொண்ட வீட்டுக்கு, அதிகபட்சமாக 1,000 ரூபாய் வரை மட்டுமே கட்டணமாக வந்தநிலையில், தற்போது, 12,000 ரூபாய் மின் கட்டணம் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்புறம் எப்படித்தான் மின்துறை அமைச்சர் குடும்பமும், அப்பா குடும்பமும் பலப் பல லட்சம் கோடிகளைச் சேர்ப்பதாம்?