உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொடைக்கானலுக்கு பஸ் திருப்பூர் மக்கள் விருப்பம்

கொடைக்கானலுக்கு பஸ் திருப்பூர் மக்கள் விருப்பம்

- நமது நிருபர் -'கோடை வாசஸ்தலங்களான, கொடைக்கானல் மற்றும் ஏற்காட்டுக்கு பஸ் இயக்க வேண்டும்,' என்ற எதிர்பார்ப்பு திருப்பூர் மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.திருப்பூரில் இருந்து, 146 கி.மீ., தொலைவில் உள்ளது கொடைக்கானல். திருப்பூரில் இருந்து நேரடி பஸ் இல்லாததால், பழநி அல்லது வத்தலகுண்டு சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டியுள்ளது. திருப்பூரில் இருந்து, 148கி.மீ., தொலைவில் ஏற்காடு உள்ளது. திருப்பூரில் இருந்து நேரடி பஸ் வசதி இல்லை. சேலம் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டும். இதனால், இவ்விரு பகுதிகளுக்கும் திருப்பூரில் இருந்து நேரடியாக பஸ்கள் இயக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !