உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் தெற்கு ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு; சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்

திருப்பூர் தெற்கு ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு; சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்

திருப்பூர்; திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, தெற்கு ரோட்டரி ஹாலில் நேற்று மாலை நடந்தது.இதில்,ரோட்டரி தலைவர் மோகனசுந்தரம் வரவேற்றார். செயலாளர் மோகன்ராஜ், ஆண்டறிக்கை சமர்ப்பித்து பேசுகையில், ''கடந்தாண்டு, 715 சேவை பணிகளை செய்து, சாதனை படைத்துள்ளோம்,'' என்றார். பொருளாளர் ராம்குமார் பாலாஜி, பேசினார்.பின், 2025 - 2026க்கான புதிய நிர்வாகிகளுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் லோகநாதன், பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழரசு ரங்கசாமி பேசியதாவது:தெற்கு ரோட்டரி சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள முதியோர் இல்ல கட்டுமானப்பணிக்கு, அவிநாசி நம்பியாம்பாளையத்தில், கனகராஜ், துரைசாமி ஆகியோர் கொடையாக வழங்கிய 2.5 ஏக்கர் நிலத்தில், 25 ஆயிரம் சதுர அடியில் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க முயற்சி செய்வது; விவசாயிகளின் விளைபொருட்கள் வீணாகாமல் தடுக்கும் நோக்கிலும், அவர்கள் இருப்பு வைத்து விற்பனை செய்து கொள்வதற்கு ஏதுவாக, உழவர் சந்தை அருகே, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் குளிரூட்டப்பட்ட கிடங்கு வசதி ஏற்படுத்துவது; தெற்கு ரோட்டரி தலைமையில், பிற ரோட்டரி சங்கங்களை இணைத்து, திருப்பூர் மாவட்டத்திற்குள், 18 கி.மீ., துாரத்துக்கு பயணிக்கும் கவுசிகா நதியை துார்வாரி சுத்தப்படுத்துவது உள்ளிட்ட மூன்று பணிகளை முக்கிய திட்டமாக முன்னெடுக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் பேசினார்.புதிய செயலாளராக பொறுப்பேற்ற பினுமோன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மாவட்ட ஆளுநர் தனசேகர், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் நாசர், இளங்குமரன், நாராயணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ