த.மா.கா., ஆலோசனை
பல்லடம் நகரம் மற்றும் வட்டார த.மா.கா., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் கூட்டணி தலைவர் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமியின் வருகை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகர தலைவர் முத்துக்குமார், வட்டார தலைவர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட நிர்வாகிகள் ஜெகதீசன், சின்னசாமி உள்ளிட்ட சார்பு அமைப்பு நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஓட்டுச்சாவடி முகவர்கள் பணியை விரைந்து முடிப்பது, 12ம் தேதி வருகை தரும் பழனிசாமிக்கு கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, பல்லடம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண ரிங் ரோடு பணியை விரைந்து மேற்கொண்டு செய்து முடிக்க அரசை வலியுறுத்துவது, வாக்காளர்கள் அதிகமுள்ள பல்லடம் தொகுதியை இரண்டாகப் பிரிக்க தேர்தல் கமிஷனுக்கு மனு அளிப்பது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.