உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள்!

இன்று கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள்!

திருப்பூர்; 'வாழ்வு ஒரு முடிவற்ற திருப்பயணம்; ஆன்மாவிற்கு அழிவில்லை' என்ற கோட்பாட்டை கொண்டுள்ள கிறிஸ்தவர்கள், இன்று, கல்லறை திருநாள் அனுசரிக்கின்றனர்.தங்கள் குடும்பத்தில் இறந்த உறவினர்களின் நினைவாக, அவர்கள் ஆன்மா இறைவன் திருவடியில், சமாதானத்தில் இளைப்பாற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, ஆண்டுதோறும், நவ.2ல், கல்லறை திருநாள் அனுசரிக்கின்றனர்.கல்லறைகளை சுத்தம் செய்து, மலர் சூட்டி, மெழுகுவர்த்தி ஏந்தி, இறந்த தங்கள் சொந்தங்களை நினைத்து கண்ணீர் விட்டு பிரார்த்தனை ஏறெடுப்பார்கள். உறவினர்களோடு வீடுகளில் கூடி, இறந்து போனவர்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள்.தேவாலயங்கள் மற்றும் கல்லறைத் தோட்டங்களில் தேவாலய குருக்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை