மோசமான சூழலில் இன்றைய அரசியல்
பல்லடம்; பல்லடத்தில், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா, சுதந்திர தின விழா ஆகியன கொண்டாடப்பட்டன. மாநில தலைவர் காளப்பட்டி பொன்னுசாமி பேசுகையில், ''மோசமான சூழலில் இன்றைய அரசியல் நிலை உள்ளது. இன்று அரசு துறைகளில் ஏதாவது வேலையை இலவசமாக செய்து கொள்ள முடியுமா? காமராஜரை நெஞ்சில் நினைத்தபடியே இத்தனை ஆண்டு காலம் நாங்கள் கடந்துவிட்டோம். நல்ல வேட்பாளர்கள் ஓட்டுகளை பெற முடிவதில்லை. இச்சூழலில் இருந்து மீள்வது சிரமம்'' என்றார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாகி ஈஸ்வரமூர்த்திக்கு, காமராஜர் விருது வழங்கப்பட்டது.