அறிவொளி ரோட்டில் ரூ.17 லட்சத்தில் கழிப்பிடம்
திருப்பூர்; திருப்பூர் ஈஸ்வரன் கோவிலை ஒட்டி அமைந்துள்ள அறிவொளி ரோட்டில், புதிய கழிப்பிடம் கட்டப்படவுள்ளது. இதற்காக எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில், 17.20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு தலைவர் சங்குராஜ், அறங்காவலர்கள் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.