உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செப்., 19ல் அமைச்சர்களுக்கு தக்காளி பார்சல்

செப்., 19ல் அமைச்சர்களுக்கு தக்காளி பார்சல்

பல்லடம்:'அமைச்சர்களுக்கு தக்காளி பார்சல் அனுப்பப்படும்' என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன் மாநில ஊடகப்பிரிவு செயலர் ஈஸ்வரன் கூறுகையில், ''தக்காளி விலை, 14 கிலோ கொண்ட பெட்டி, 100 ரூபாய்க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்படுகிறது. தக்காளி விலை சரிவால் பாதிக்கப்படும் விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை. ''விவசாயிகளை கவனத்தில் கொள்ள வலியுறுத்தி, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், உணவு அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோருக்கு செப்., 19ல் தக்காளி பார்சல் அனுப்பப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vasan
செப் 17, 2025 05:11

பார்ஸலில் அனுப்ப போவது நல்ல தக்காளியா, அழுகிய தக்காளியா? விவசாயிகள் படும் பாடு மிகவும் வேதனைக்கு உரிய விஷயம்.


Mani . V
செப் 17, 2025 04:38

அனுப்பி? அதை விற்று காசாக்கி விடுவார்கள் அந்த கேடுகெட்ட, மக்கள் விரோத ஜென்மங்கள்.


புதிய வீடியோ