உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சரியும் தக்காளி விலை

 சரியும் தக்காளி விலை

பொங்கலுார்: புரட்டாசிப் பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் நடவு செய்யப்பட்ட தக்காளி போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. வரத்து குறைந்ததால் இதுவரை தக்காளி அதிக விலைக்கு விற்பனையானது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தக்காளி உபயோகத்தை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகினர். கார்த்திகை பட்டத்தில் நடவு செய்த தக்காளி விரைவில் அறுவடை சீசன் துவங்க உள்ளது. வெளியூர் வரத்தும் இருப்பதால் தற்போது,15 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 700 ரூபாயிலிருந்து, 350 ஆக சரிந்துள்ளது. தற்பொழுது பனிக்காலம் துவங்கி உள்ளதால் தக்காளி விளைச்சல் வழக்கத்தை விட அதிகரிக்கும். இதனால் வரும் வாரங்களில் தக்காளி விலை மேலும் சரியும் வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை