உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இரவில் மட்டம் அடிக்கும் டவுன் பஸ்கள்; காத்திருக்கும் பயணியர் கடுப்பு

இரவில் மட்டம் அடிக்கும் டவுன் பஸ்கள்; காத்திருக்கும் பயணியர் கடுப்பு

திருப்பூர்; மங்கலம் - திருப்பூர் ரோட்டில் இரவு நேரத்தில் டவுன்பஸ்கள் ஆங்காங்கே நிறுத்துவது வாடிக்கையாகியுள்ளது. பாரப்பாளையம் பிரிவு ரவுண்டானா - ராயபுரம் தீபம் பாலம் சந்திப்பு அருகே, சோமனுார்செல்லும், 5 ஏ புதிய பஸ் (பி.எஸ்., 6) ஒன்றும், பழைய பஸ் ஒன்றும் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது.இரவு, 9:30 மணி முதல், 10:15 மணி வரை, 45 நிமிடத்துக்கு மேலாக பஸ்கள் இரண்டும்அதே இடத்தில் நின் றுள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் பஸ் பழுதாகி நிற்கிறதாஎன்பது குறித்து கேள்வி எழுப்பிய போது, சுதாரித்த டிரைவர், நடத்துனர் இரு பஸ்ைஸ அங்கிருந்து கிளப்பிச் சென்றனர்.இரவு நேரங்களில் பஸ்கள் டிப்போ அல்லது சென்று சேருமிடம், புறப்படும் இடத்தில் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளது.அவ்வாறு நிறுத்தாமல் நடுவழியில் பஸ்களை நிறுத்தியது ஏன்? பஸ்சில் இருந்து அதிகளவில்ஆயில் ஒழுகி, மங்கலம் ரோடு முழுதும், ஆயில் நாற்றம் அடித்தது.ஏதேனும் பழுது காரணமாக இருந்ததா, ஆகையால் பஸ் நகர்த்த வழியின்றி நிறுத்தப்பட்டதா, டவுன் பஸ்கள் சரிவர இரவு, 9:00 மணிக்கு பின்னர்இயக்கப்படுகிறதா என்பது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ