உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிற்சங்கத்தினர் மறியல்; 675 பேர் கைது

தொழிற்சங்கத்தினர் மறியல்; 675 பேர் கைது

திருப்பூர்; மத்திய அரசை கண்டித்து, இரண்டு இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 675 பேரை போலீசார் கைது செய்தனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய அளவிலான வேலை நிறுத்த்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தது. அதன் ஒரு பகுதியாக, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யூ.சி., உட்பட, 13 தொழிற்சங்கங்கள் திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன், சாலை மறியல் போராட்டத்தை நடத்தியது. இதேபோல், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்த போராட்டத்தில், 81 பேர் மற்றும் தலைமை தபால் நிலையம் முன், 594 பேர் என, இரண்டு இடங்களில்,.மொத்தம், 675 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவிநாசி

அவிநாசியில் பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பாக இருவேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் முத்துசாமி தலைமையில், மெயின் ரோட்டில் போஸ்ட் ஆபீஸ் முன், சேவூர் ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி முன்பும் நடந்த மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட, 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களில் தங்க வைத்து, மாலையில் விடுதலை செய்தனர்.

பல்லடம்

பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், பல்லடத்தில் சாலை மறியல் நடந்தது. எம்.எல்.எப்., வட்டார செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., பல்லடம் ஒன்றிய பொறுப்பாளர் பரமசிவம், ம.தி.மு.க., பல்லடம் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், இ.கம்யூ., பொங்கலுார் ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நுாற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்ததனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ