மேலும் செய்திகள்
பாரம்பரிய கலாசாரம் பள்ளியில் விழிப்புணர்வு
10-Dec-2025
திருப்பூர்: திருப்பூர், கூலிபாளையம் நால் ரோடு பகுதியில் உள்ள வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், பாரம்பரிய கலை மற்றும் இசை விழா (Classic Winter tales celebration) நடந்தது. தாளாளர் ஆண்டவர் ராமசாமி தலைமை தாங்கினார். பள்ளி பாடல் குழுவினரின் பஜனை; ஆசிரியர்களின் நடனம், மாணவிகளின் கோலாட்டம், மாணவர்களின் ஒயிலாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்டவை மார்கழி மாதத்தின் ஆன்மிகப் பெருமைகளையும், தமிழர் பண்பாட்டு மரபுகளை எடுத்துரைப்பதாக அமைந்தது. பொருளாளர் ராதா ராமசாமி நிகழ்ச்சிகளை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்ததோடு, செயலாளர் சிவப்ரியாவுடன் இணைந்து வெற்றி பெற்றோருக்கு பரிசுகளையும் வழங்கினார். வி.ஐ.பி.ஸ் பாரம்பரிய நடனக்குழுவினர் வழங்கிய 'சுந்தரகாண்டம்' நாட்டிய நாடகம்; வீணை இசை நிகழ்ச்சி; அவிநாசி யு.ஆர்.பி இசைக்குழுவின் வயலின் நிகழ்ச்சி உள்ளிட்டவை பார்வையாளர்களைக் கவர்ந்தன. முதல்வர் சசிரேகா நன்றி கூறினார்.
10-Dec-2025