உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலை நகரில் இன்று போக்குவரத்தில் மாற்றம்

உடுமலை நகரில் இன்று போக்குவரத்தில் மாற்றம்

உடுமலை; பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி, நகரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.உடுமலை நகரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது. பொள்ளாச்சி ரோட்டிலுள்ள கோவிலில் இருந்து தேரோட்டம் துவங்கி, தளி ரோடு சந்திப்பு வழியாக குட்டைத்திடல், தலகொண்டம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை வழியாக மீண்டும் பொள்ளாச்சி ரோட்டில் இணைந்து, கோவிலை வந்தடைகிறது.மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் துவங்குவதால், நகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பழநி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், பாலப்பம்பட்டியில் இருந்து நான்கு வழிச்சாலை வழியாக செல்ல வேண்டும்.இதே போல், திருப்பூர், செஞ்சேரிமலை வழித்தடத்தில் வரும் வாகனங்களும், ஏரிப்பாளையம் அருகே நான்கு வழிச்சாலையில் பிரிய வேண்டும்.ஆனைமலை ரோட்டில் வரும் வாகனங்கள், முக்கோணத்தில் பிரிந்து, வாளவாடி பிரிவு வழியாக குரல்குட்டை பிரிவு, மலையாண்டிகவுண்டனுார் பிரிவு வழியாக பழநி ரோட்டுக்கு செல்ல வேண்டும்.இதே போல், வாகனங்களை நிறுத்த, உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் அருகிலும், எஸ்.கே.பி., பள்ளி பின்புற மைதானம், நகராட்சி அலுவலகம், தேஜஸ் மகால், நேதாஜி மைதானம் உள்ளிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து இடம் மாற்றப்படும் இடங்களில், கண்காணிப்புக்கு போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை