போக்குவரத்து விதிமுறை விழிப்புணர்வு நாடகம்
உடுமலை; உடுமலையில், கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களின், போக்குவரத்து விதிமுறைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.உடுமலை பஸ் ஸ்டாண்டில், இப்பள்ளி மாணவர்களின் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடந்தது. பள்ளி முதல்வர் கவிதா முன்னிலை வகித்தார்.வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது எனவும், மாணவர்கள் நகைச்சுவை நிகழ்ச்சியாக நாடகம் நடித்தனர். போக்குவரத்து காவல்துறையினர், பொதுமக்கள், மாணவர்களின் நாடகத்தை பார்வையிட்டனர்.